கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் வித்தியாசமான முறையில் கொள்ளை!! நடப்பது என்ன? Share

கொழும்பில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் புதியபுதிய யுக்தியுடன் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

 

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பெனிக்குயிக் ஒழுங்கையில் வைத்து பெண்ணொருவரின் ஒரு சோடி தங்க வளையல்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

குறித்த பெண் அருகிலிருந்த தேவாலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டு விட்டு நண்பகல் 1-00 மணியளவில் பெனிக்குயிக் ஒழுங்கை ஊடாக நடந்து வந்துள்ளார்.

அச்சமயம் அவரை எதிர்கொண்ட மற்றொரு பெண் அம்மா உங்களின் கையிலிருக்கும் தங்க வளையல்கள் இரண்டையும் கழற்றித் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்தப் பெண்ணோ அதனை என்னால் கழற்ற முடியாது, அதை எவ்வாறு உங்களுக்கு கொடுப்பது என்று மறுக்கவே உடனே வழிப்பறியில் ஈடுபட்ட குறித்த பெண் எதிர்பாராத வகையில் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதனால் நிலைகுலைந்து போயிருந்த பெண்ணின் நிலைமையை அறிந்து கொண்ட நிலையில், இதுதான் தக்க தருணம் என்பதை பயன்படுத்திக்கொண்டு அங்கு வந்த இருவர் சத்தம் போடக் கூடாது என்று கத்தியைக் காட்டி மிரட்டி கையிலிருந்த தங்க வளையல்களையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் திட்டமிட்டே இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் தேவாலயங்கள் மற்றும் சன நடமாட்டம் குறைந்த பகுதியில் நடமாடும் புதுமுகங்கள் விடயத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

இவர்கள் வங்கிகள், ஆலய வாசல்களில் நின்றவாறு அங்கு வந்து செல்வோரை அவதானித்திருந்து இவ்வாறு வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும் எனவே தனியாக செல்லும் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அழைத்தாலோ அல்லது கேள்வி கேட்டாலோ அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர்களுடன் அநாவசியமாக அளவளாவக் கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில் பொலிஸாரும் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன் வீதிகளில் தேவையின்றி சந்தேகத்துக்கிடமாக அலைந்து திரிவோரை கைது செய்ய வேண்டும் என்று இப்பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..