முஸ்லிம் குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டம்! (Video) Share

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பகுதியை அழித்து 1444 முஸ்லிம் மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையை அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கொண்டுவந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முற்பகல் 11.00 மணியவில் இளைஞர் அணியினரால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் குறித்த பேரணி ஆரம்பித்து காடழிப்பு நிகழ்த்த படவிருக்கும் கூளாமுறிப்பு பிரதேசம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.

இப்போராட்டத்தில் வடக்கு மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து மக்கள் வருகை தந்திருந்ததோடு, சமூக வலைத்தளமூடாக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தினை ஒன்றிணைந்த இளைஞர் குழு ஏற்பாடு செய்திருந்தது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..