காதலியைக் குத்திக் கொலை செய்தது ஏன்? சரணடைந்த இளைஞனின் வாக்குமூலம் இது Share

திருவண்ணாமலை ஆரணி அருகே மோனிகா என்ற கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு விவசாய நிலத்தில் சடலமாக கிடந்துள்ளார்.தான் தான் கொலை செய்தேன் என போளுர் காவல் நிலையத்தில் காதலன் சரண் அடைந்துள்ளான்.

ஆரணி அருகே மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோனிகா (20), இவர் முன்னால் ராணுவ வீரரின் மகள், காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பிஏ படித்துவந்துள்ளார்.

வீட்டிற்கு வருவதாக கூறிய மகளை காணவில்லையே என பெற்றோர்கள் தேடி வந்த நிலையில் அரியப்பாடியில் உள்ள விவசாய நிலத்தில் மோனிகா சடலமாக கிடந்துள்ளார்.

”மோனிகா என்னை காதலித்து வந்தார், திடீர் என வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யப் வோதாக கூறினார், என்னை ஏமாற்றியதால் கொலை செய்தேன்” என சரண் அடைந்த கோகுல்நாத் கூறியுள்ளான். போலிசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சரண் அடைந்வனின் வீட்டை மோனிகாவின் உறவினர்கள் அடித்து உடைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..