சிறைப் பாதுகாவலர் பதவிக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன Share

சிறைச்சாலைகள் பாதுகாப்பாளர் பதவிக்கு ஆயிரத்து 200 வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடமையில் இருக்கும் பாதுகாப்பாளர் தொடர்ந்து 3 இல்லது 4 நாள்களுக்கு கடமையாற்ற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது என்று திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னர் 350 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டு பின்னர் அந்த நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்டவர்கள் முறையற்ற விதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரால் நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பு அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..