பாலியல் தேவைகளுக்காக 1000 டொலர்களுக்கு விற்கப்படும் உக்ரைன் இளம் பெண்கள்..(Video) Share

பெண்களை கடத்தி, இஸ்ரேலில் பாலியல் அடிமைகளாக விற்று வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.Dnepropetrowsk நகரில் இயங்கும், உக்ரைனிய – இஸ்ரேலிய குற்றவாளி கும்பல், 18 – 35 வயதுக்குட்பட்ட இளம் பெண்களை கடத்திச் சென்று, இஸ்ரேலில் ஹைபா நகரில் 500 முதல் 1000 டொலர்களுக்கு விற்று வந்துள்ளது.

இவ்வாறு விற்கப்படும் பெண்கள் ஹைபா நகர விபச்சார விடுதிகளில் பாலியல் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும்.

இந்நிலையில் உக்ரைனின் Dnepropetrowsk நகரின் , 8 இடங்களில் திடீர் சோதனை ஈடுபட்ட அதிகாரிகள் Zaporozhye பகுதியிலிருந்து பாலியல் அடிமைகளாக இஸ்ரேலுக்கு கடத்தப்பட இருந்த 6 உக்ரைன் இளம் பெண்களை மீட்டுள்ளனர்.

மேலும், உக்ரைன் பெண்களைக் கடத்தி இஸ்ரேலில் பாலியல் அடிமைகளாக விற்ற வந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..