என்னை அவர் மசாஜ் செய்யவைத்தார் மாணவி சொன்ன திடுக்கிடும் தகவல் Share

அவர் என்னை மசாஜ் செய்யச்சொல்லி மிரட்டினர். நானும் வேறுவழியின்றி மசாஜ் செய்தேன். அதை யாரோ செல்போனில் விடியோ எடுத்து விட்டார்கள். இது தான் அந்த பள்ளி மாணவியின் வாக்குமூலம்

 

ஒடிசா மாநிலத்தில் சாம்பல்பூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது மேல்நிலை பள்ளி ஒன்று. அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியை சேர்ந்த பெண் ஆசிரியை தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த மாணவியும் வேறு வழியின்றி ஆசிரியரின் மிரட்டலுக்கு பயந்து மசாஜ் செய்துள்ளார்.

இந்நிலையில் ஆசிரியருக்கு மாணவி மசாஜ் செய்துவிட்ட விடியோ சமூகவலைதளத்தில் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு காரணமாக பெண் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட கல்வி அதிகாரி பரமோத் பான்டா இவ்விவகாரத்தில் தொடர்புடைய பெண் ஆசிரியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..