கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை துண்டாக்கி பொலிசில் கொடுத்த இளம்பெண் Share

கேரளாவில் இளம்பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கி பொலிஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார்.கொச்சி மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

அப்போது, 30 வயதான அண்டை வீட்டுக்காரர் ராகேஷ் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

ராகேஷிடமிருந்து தப்பிக்க முயன்ற பெண் அவனின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார். பின்னர், நாக்குடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவமனைகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், ஒரு தனியார் மருத்துவமனையில் ராகேஷ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

சிகிச்சை முடிந்த பின்னர், ராகேஷ் கைது செய்த பொலிசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..