மகாஜனக் கல்லூரி மாணவன் தேசிய உதைபந்தாட்ட அணியில் (Photos) Share

யா/மகாஜனக் கல்லூரி வீரன் ரவிக்குமார் தனுஜன் தெற்காசிய நாடுகளின் 15 வயது தேசிய உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனம் (SAFF) நடாத்தும் உதைபந்தாட்ட தொடரில்

பங்குபற்றும் இலங்கை 15 வயது தேசிய உதைபந்தாட்ட அணியில்இடம்பிடித்துள்ளார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை நேபாளத்தில் இத்தொடர் நடைபெறவுள்ளது.
இவர் கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஜப்பான், பூட்டான், நேபாளம், மாலை தீவு ஆகிய நாடுகளின் 16 வயதிற்குட்பட்ட தேசிய அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியிலும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..