பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் புதிதாக புத்தர் சிலை Share

பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் அமைந் துள்ள இந்து ஆலயத்திற்கு அருகில் புதிதாக புத்தரு டைய சிலை ஒன்றை இராணுவத்தினர் அடாத்தாக அமைத்துள்ளனர்.வழிபாட்டு தலங்கள் அமைக்கப்படும் போது உள்@ராட்சி திணைக்களங்களில் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது இலங்கையின் சட்டமாகும். ஆனால் இந்த நடை முறை குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதில் பின்பற்றப்படவில்லை என உள்@ராட்சி திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் உள்ள வைரவ கோவிலிற்கு பக்கத்தில் உள்ள ஆலமரத்தின் கீழ் சிறிதாக புத்தர் சிலை ஒன்று கடந்த 2010 ஆம் ஆண்டள வில் இராணுவத்தினரால் வைக்கப்பட்டி
ருந்தது.
 
இந்த சிலை சிறிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக இராணுவத்தினரால் குறித்த புத்தர் சிலை இருந்த இடம் விஸ்தரிக்கப்பட்டு தற்போது புதிதாக புத்த கோவில் போன்ற அமைப்பில் புத்தர் சிலையுடனான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு அருகில் முன்னரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு இராணுவத்தினர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் யுத்தத்திற்கு முன்பிருந்தே அப்பகுதியில் நிரந்தரமாக உள்ள இந்து கோவிலுக்கு நடத்தப்பட்டு வந்த பூஜை வழிபாடுகள் மற்றும் பொங்கல் நிகழ்வுகளை நடத்து வதற்கு தேவையான இடவசதி போதாமையாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த கோவிலுக்கு அருகா மையில் பாரிய படை முகாம் ஒன்று காண ப்படுவதோடு, படையினரால் உணவகம் ஒன்றும் நடத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை பருத்தித்துறை முனை பகுதியிலும் தனியார் காணி ஒன்றில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டு நீண்டகாலமா னநிலையில், அதுவும் படிப்படியாக விஸ்த ரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
 
இவ்வாறு ஆலமரங்கள் காணப்படும் இடங்களில் இந்து கோவில்கள் காணப்பட்டாலும் அதனை மறைத்து புத்த கோவில்க ளை அமைக்கும் முயற்சிகளில் இராணு வத்தினர் இறங்கியுள்ளமை அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.  

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com