யாழ்ப்பாண தர்ஜினியின் விளையாட்டால் பரபரப்பாகின்றது அவுஸ்ரேலியா!! (photos) Share

இலங்கையின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி,

உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும்.

ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் தனது திறமையை முழு அரங்கிற்கும் வெளிப்படுத்திய தர்ஜினி மாத்திரம் அணிக்காக 51 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியுடன் தர்ஜினியின் அணி பூர்வாங்க இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. அந்தச் சுற்றில் City West Falcons அணி தனது பூர்வாங்க இறுதியில் DC North East Blaze அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய அணியின் நட்சத்திரமான தர்ஜினி ஆறு மாத ஒப்பந்தத்தின்படியே அவுஸ்திரேலியா சென்று விளையாடி வருகிறார்.

Image may contain: 3 people, people smiling, people standing and outdoorImage may contain: one or more people and people playing sportImage may contain: 3 people, people smiling, people standing and outdoorImage may contain: 3 people, people playing sport, basketball court and shoesImage may contain: 1 person, shoes and outdoorImage may contain: 12 people, people smiling, people standing and shoes

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..