கைத் தொலைபேசியால் அழிவு நிச்சயம்!! வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியதால் பரபரப்பு Share

“அலைபேசிகள், நிச்சயம் எமது உடல் உறுப்புகளில் தாங்கங்களை ஏற்படுத்தும்” என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.யாழ் புத்தகத் திருவிழா, மாநகரசபை சுகாதாரப் பணிமனையில், நேற்று நடைபெற்றத. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை பூரணத்துவம் அடையச் செய்கின்றது. சில காலங்களுக்கு முன்னர் படித்தவர்கள் வசிக்கின்ற பலர் வீடுகளில் ஒரு சிறிய நூலகமொன்றில் புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு ஒரு தொகைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களும் அருகில் உள்ள நூல் நிலையங்களுக்கு சென்று சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் பகுதியான நேரங்களை வாசிப்பில் செலவு செய்வார்கள். இலத்திரனியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் புத்தகங்களைத் தேடிப் போய் வாசிப்புப் பழக்கங்களில் ஈடுபடுகின்ற நிலையை மாற்றிக்கொண்டு தமக்குத் தேவையான தரவுகளை இணையத்தளங்களின் ஊடாக இலகுவில் சேகரித்து விடுகின்றார்கள். இதனால் கூடுதலான நேரம் மீதப்படுத்தப்படுகின்றது. தேவையான தரவை நேரடியாகச் சென்று பெறக்கூடிய வழிமுறைகள் காணப்படுகின்றன. அதனால் புத்தகங்களை துரவி ஆராய்ந்து விடயங்களைத் தேடுகின்ற பழக்கம் ஓரளவு கைவிடப்பட்டுவிட்டது என்றே குறிப்பிட வேண்டும்.

“இது ஒரு வகையில், நேரத்தை மீதப்படுத்துவதாக அமைந்துள்ள போதிலும் தீமைகளும் கூடவே இருக்கச் செய்கின்றது. புத்தகங்களை கூடுதலாக வாசிக்காமையால் இன்றைய இளைஞர், யுவதிகளிடம் வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் உச்சரிப்புக்களில் தவறுகள் ஏற்படுகின்றன. ஆகவே, மொழியின் பாவனை மருவிச் செல்கின்றது. முறையான இலக்கணத்துடன் கூடிய சொல் வடிவங்களில் நாட்டம் குறைகின்றது.

“அலைபேசி பாவனை என்பது, எமது உடலில் மூளையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை உடனடியாக அறிந்து விட முடியாது. ஆனால், காலப்போக்கில் இதன் தாக்கங்கள் உணரப்படுகின்ற வேளையில் எமது மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அளவிட முடியாதவை. தினமும் பல்லாயிரக்கணக்கான மின்காந்த அலைகள் எமது மூளையினூடாக குறுக்கும் நெடுக்கும் செலுத்தப்படுகின்றன. இவைகள் நிச்சயம் எமது உடல் உறுப்புகளில் தாங்கங்களை ஏற்படுத்தும்” என்றார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..