18 வயது மாணவனுடன் ஓடிய 32 வயது சிந்துஜா ரீச்சர்!! எங்கே நடந்தது? Share

சேலம் அருகே பிளஸ் 2 மாணவனுடன், திருமணமான ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் அரவிந்தசாமி(18, பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் கருப்பூர் அருகே மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். முன்னதாக, கருப்பூரில் உள்ள மற்றொரு தனியார் மெட்ரிக் பள்ளியில்  6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படித்தார். அப்போது அதே பள்ளியில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்த ஆசிரியை ஓவியா(32, பெயர் மாற்றப்பட்டுள்ளது)மாணவருடன்  அன்னியோன்யமாக பழகியுள்ளார். ஆசிரியை, மாணவன் இடையேயான நட்பு என்பதால், யாரும் இதை தவறாக கருதவில்லை. திருமணமான ஓவியாவுக்கு 11 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை வீட்டுக்கு மாணவர் அரவிந்தசாமி அடிக்கடி வந்து சென்றதால், பாடம் சம்பந்தமாக சந்தேகம் கேட்பதற்காக வருகிறார் என்றே அக்கம்பக்கத்தினர் கருதினர்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி, அரவிந்தசாமியை சங்ககிரிக்கு அழைத்து செல்ல அவரது தாய் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தார். அப்போது, குடிக்க தண்ணீர் வாங்கி வருகிறேன் என கூறி விட்டு சென்ற மாணவர் திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.   விசாரணை நடத்திய போலீசார், இரும்பாலை ஸ்டேஷனுக்கு புகாரை அனுப்பி விசாரித்தனர். இந்நிலையில் தனது மனைவியை காணவில்லை என ஓவியாவின் கணவர் இரும்பாலை ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். மாணவன் அரவிந்தசாமியை கடத்தி கொண்டு ஆசிரியை ஓவியா தலைமைறைவாகி விட்டதாகவும் அவரிடம் இருந்து தங்களது மகனை மீட்டு தரவேண்டும் என்றும் போலீசாரிடம் மாணவரின் பெற்றோர் தெரிவித்தனர். தற்போது இருவரும் எங்கே இருக்கிறார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. புகாரின் பேரில் ரசீது  கொடுத்துள்ள போலீசார், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சேலத்தில் மாணவருடன்  ஆசிரியை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..