சிங்கத்தை சினம் கொள்ள வைக்காதீர்கள்! Share

சிங்கம் தூங்கும்போது நாம் எழுப்பினாலும் நாம் தூங்கும்போது சிங்கம் எழும்பினாலும்


சங்கு என்னவோ நமக்குதான்! ஆகவே
சிங்கத்தை தொந்தரவு பண்ணாதீர்கள்

சிங்கம் சிங்கக்கொடியை ஏந்தியது
எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது
சிங்கம் புலிகளை பயங்கரவாதி என்றது
கொழும்பில் கொகுசு பங்களா கிடைத்தது

ஒரு வருடத்தில் தீர்வு என்று சிங்கம் கூறியது
இருவாரங்களில் நல்ல செய்தி வரும் என்றது
ஆனால் கிடைத்தது என்னவோ கொழும்பில்
4 கோடி ரூபா செலவில் 2வது சொகுசு பங்களா

காணாமல் போனோரின் உறவுகள் காலைப் பிடித்து கெஞ்சினால்
சிங்கத்திற்கு அந் நேரம் கண் தெரிவதில்லையாம்
முன்னாள் போராளிகள் சிறை விடுதலை பற்றி கேட்டால்
சிங்கத்திற்கு அந் நேரம் காது கேட்பதில்லையாம்.
ஆனால் சந்திரிக்கா அருகில் இருந்து குசு குசுத்தால்
சிங்கத்திற்கு எல்லா உறுப்பும் நன்றாய் வேலை செய்யுதாம்

இந்திய தூதரின் விருந்தில் அடித்த தண்ணியில்
சிங்கம் போதையில் படுத்திருப்பதாக எண்ணி விடாதீர்கள்.
தமிழருக்காக உழைத்து உழைத்து
சிங்கம் அயர்ந்து தூங்குவதாகவும் நினைத்து விடாதீர்கள்

அடுத்த தேர்தலுக்கு தமிழர்களை
என்ன சொல்லி ஏமாற்றுவது என்று
சிங்கம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது.
எனவே சிங்கத்தை சீண்டி சினங்கொள்ள வைக்காதீர்கள்!

குறிப்பு- நாயுடன் ஒப்பிட்டால் நாயைக் கேவலப்படுத்திவிட்டதாக சிலர் குறைபடுகிறார்கள். எனவேதான் சிங்கத்துடன் ஒப்பிட்டுள்ளேன். இப்போ ஓ.கே வா?

Image may contain: 1 person, sitting

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..