அண்ணன் தங்கைக்குள் ஏற்பட்ட தகாத உறவு: நடந்த விபரீதம் Share

தங்கையுடன் அண்ணனுக்கு தகாத உறவு இருந்த நிலையில், இது குறித்து வெளியில் தெரிந்து விடும் என பயந்து அண்ணன், தங்கையை சுட்டு கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள Chhapra நகரை சேர்ந்தவர் பூஜா (20). பூஜாவுக்கும், அண்ணன் முறையான 22 வயது உறவுக்கார இளைஞருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

பூஜாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடத்த பெற்றோர் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், பூஜா வீட்டுக்கு வந்த அண்ணன் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இவர்களின் தகாத உறவு பூஜா மூலம் வெளியில் தெரிந்துவிடும் என பயந்து அவர் சுட்டுள்ளார்.

பூஜாவின் காதில் தோட்டா பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குற்றவாளி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பூஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்த செல்போன், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றியுள்ள பொலிசார் கொலையாளியை தேடி வருகிறார்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..