பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா ? - காணொளி Share

பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் தொடர்பையேற்படுத்தி 13 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் வரதட்சணை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை தந்திரமாக வசூலித்த பின்னர் குறித்த பெண் ஆண்களை மிகவும் தந்திரமாக ஏமாற்றி விடுகிறார்.

32 வயதான ஜரியாபார்ன் புயாயய் என்பர் தாய்லாந்தின் நங் ஹாய் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் இவர் பணம் சம்பாதிக்க புதிய முறையை கையாண்டார்.

பெரும்பாலும் திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் வரதட்சணை வழங்க வேண்டும். ஆனால் தாய்லாந்து பாரம்பரியபடி திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை பணம் வழங்க வேண்டும்.

எனவே பணம் சம்பாதிக்க ஜரியாபார்ன் திருமணம் செய்து வரதட்சணை பணத்தை மோசடி செய்ய திட்டம் தீட்டினாள். 13 ஆண்களை தொடர்ந்து திருமணம் செய்தாள். அவர்களிடம் இருந்து வரதட்சணையாக ரூபா.4 இலட்சம் முதல் ரூ 20 இலட்சம்வரை வசூலித்தாள்.

பணம் மட்டுமின்றி கார் மற்றும் லொறி போன்றவற்றையும் வரதட்சணையாகப் பெற்றாள். பின்னர் ஏதாவது ஒரு காரணம் கூறி அவர்களுடன் சேர்ந்து வாழாமல் விவாகரத்துப் பெற்றாள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாடடையடுத்து குறித்த பெண் தாய்லாந்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது சொந்த ஊருக்கு வந்த அவள் தனது பெற்றோருடன் சேர்ந்து பழ வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தாள்.  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 ஆண்களை திருமணம் செய்திருந்தாள். அழகிய தோற்றம் கொண்ட அவள் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் தனது போட்டோவை பிரசுரித்து அவர்களை வசியம் செய்து திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..