மருத்துவம் ஆயகலைகள் அறுபத்தினான்கில் ஓன்றாகும் - வைத்திய நிபுணர். சி. சிவன்சுதன் Share

மருத்துவக்கலையை ஆயகலைகள் அறுபத்தினான்கில் ஓன்றாக வைப்படுத்தியிருக்கிறார்கள். மனிதனின் சிந்தனை ஓட்டத்தில் ஏற்படும் குளப்பமான நிலையே பல உடல் சம்பந்தமான அறிகுறிகளுக்கும் நோய்களுக்கும் அடிப்படை காரணங்களாக அமைகின்றன என்பதை பல ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

அனைத்து மதங்களுமே மனிதனின் சிந்தனை ஓட்டத்தை நெறிப்படுத்தி சுகப்படுத்தும் அற்புதமான மருத்துவக்கலையை கற்பித்து நிற்கின்றன. எல்லா மதங்களிலுமே அற்புதமான மருத்துவக் கருத்துக்கள் பொதிந்திருக்கிறன்றன.
அதிகாலையில் எழுந்து குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து கோயிலுக்கு சென்று கோயிலை 3 தடவை வலம்வந்து ஆசனங்கள், அட்டாங்க பஞ்சாங்க நமஸ்காரங்கள் செய்து இறைவணக்கம் செய்ய வேண்டும் என்று இந்துமதம் சொல்லுகிறது. இங்கே உடைச்சுத்தம், உடல்சுத்தம், உடற்பயிற்சி, மன அமைதி என்ற நான்கு சுகாதார அறிவுரைகள் அடங்கி இருக்கின்றன. பஞ்சமாபாதங்களை தவிர்க்குமாறு மதங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றன. இந்த பஞ்சமா பாதங்களில் அடங்கியிருக்கும் கள், காமம் எனப்படுகின்ற மது அருந்துதல் தகாத பாலியல் தொடர்புகள் என்பவற்றை தவிர்த்து விடுவதன் மூலம் AIDS போன்ற பல கொடிய தொற்றுநோய்களிலிருந்தும் ஈரல், நரம்புகள், சம்பந்தமான நோய்களிலிருந்தும் எம்மை தற்காத்துக்கொள்ள முடியும். விரத காலங்களிலே மாப்பொருள் தவிர்த்து பால், பழங்கள், உண்ணும் மரபு அன்றிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. பால், பழங்களிலே வினைத்திறன் கூடிய புரதங்களும் விட்டமின்களும், கனியுப்புக்களும், நார்ப்பொருள்களும் இருப்பதுடன் இது உடல்நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்ககூடிய ஒரு நிறை உணவாகவும் விளங்குகிறது.

சூரிய நமஸ்காரம் எமது வழிபாட்டு முறைகளில் முக்கியமானது. இது காலையில் சூரிய ஒளியிலிருந்து சூரியனைநோக்கி நமஸ்காரம் செய்யும் ஒரு முறையாகும். இதனையே மேலைத்தேச நாடுகளிலே மருத்துவத் தேவைகளுக்காக சன்பாத் என்று செய்துவருகின்றார்கள். இதன் மூலம் பல எலும்பு பல் சம்பந்தமான நோய்களை தடுக்கமுடியும்.

மதவழிபாட்டுமுறைகள் மனிதனை உடற்பலமும் ஆன்மீக பலமும் பொருத்தியவனாக ஒரு ஆரோக்கியமுள்ள மனிதனாக வாழ்வதற்கு வழிசமைத்து நிற்கின்றது
சி. சிவன்சுதன் வைத்திய நிபுணர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..