தாம்பத்திய வாழ்க்கைக்கு உலை வைக்கும் மோசமான உணவுகள்...! Share

தம்பதியர்கள் அடிக்கடி தாம்பத்தியத்தில் ஈடுபடுவதன் மூலம், இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பு அதிகரிக்கும்.ஆனால் சில நாட்களாக நீங்களும், உங்கள் துணையும் உறவில் ஈடுபட நாட்டமின்றி இருந்தால், நீங்கள் சாப்பிடும் உணவுகளை கவனிக்க வேண்டுமென்று அர்த்தம்.

ஏனெனில் நாம் சாப்பிடும் சில உணவுகள், நம் பாலியல் வாழ்க்கைக்கு உலை வைத்துவிடும்.
ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோனும், பெண்ணின் உடலில் ஈஸ்ட்டோஜெனும் சரியான அளவில் இருந்தால் தான், உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடியும்.

இவற்றில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், பாலியல் வாழ்க்கை தான் பாதிக்கப்படும்.


இக்கட்டுரையில் பாலியல் வாழ்க்கைக்கு உலை வைக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்த்து உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
 பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நீக்கப்பட்டிருப்பதால், அவற்றை அதிகம் உட்கொண்டால், உடலுக்கு எவ்வித சத்துக்களும் கிடைக்காமல், பாலியல் வாழ்க்கையில் சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆகவே இவற்றைத் தவிர்த்திடுங்கள்.

டயட் சோடாக்கள்
 இந்த பானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இவை உடலில் உள்ள நல்ல மனநிலையைத் தரும் செரடோனின் அளவைப் பாதிக்கும். ஒருவரது உடலில் செரடோனின் அளவு குறைவாக இருந்தால், அது பாலியல் வாழ்வை பெரிதும் பாதிக்கும்.

மைக்ரோவேவ் பாப்கார்ன்
 மைக்ரோவேவ் பாப்கார்ன் போட்டு தரப்படும் கவர்/பைகளில் பெர்ஃப்ளூரோ-ஆக்டனோயிக் என்னும் அமிலம் உள்ளது. இது பாலியல் உணர்ச்சியை அழிக்கும். இந்த பாப்கார்னை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், புரோஸ்டேட் பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

மரிஜூவானா
மரிஜூவானா என்னும் பொருள், டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் பாலியல் வாழ்க்கைக்கே உலை வைத்துவிடும்.

சிகரெட் மற்றும் மது
சிகரெட், மது போன்றவை ஆண்களின் ஆண்மைத்தன்மையைப் பாதித்து, விரைவில் மலட்டுத்தன்மையை உண்டாக்கும். எனவே இப்பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால், மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..