இலங்கை சட்டக்கல்லூரி போட்டிப்பரீட்சை 30ம் திகதி..! Share

இலங்கை சட்டக்கல்லூரியில் 2018ம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 30 திகதி நடைபெறவுள்ளது என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்டை அனுமதி அட்டை கடந்த 15ம் திகதி தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சையை கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை அனுமதி அட்டை தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் 0112785230/ 0112177075 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 1911 என்ற 24 மணி நேர உடனடி அழைப்பு எண்ணுக்கோ தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..