வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு காவல்துறையில் வேலை வாய்ப்பு! Share

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதாக வடமாகாண மூத்த காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.



இன்று கிளிநொச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையினர் கௌரவிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் 1000 காவல்துறையினருக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது.

இதன்காரணமாக கிளிநொச்சி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் காவல்துறையினருக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

இதன்காரணமாக மக்களுக்குச் சேவை செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றோம். ஆகவே, வேலையற்ற பட்டதாரிகள் எம்முடன் இணைந்து அவர்களுக்குப் பொருத்தமான பணிகளைச் செய்யமுடியும்.

இதற்கான விண்ணப்பங்களை விரைவில் கோரவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..