வடக்கில் காணிகளை விடுவிக்க இன்னும் இரண்டு வருடங்கள் தேவை – இராணுவம்! Share

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படுவதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்கத் திணைக்களத்தில் நடைபெற்றபோதே இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு புதியதொரு வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் இரண்டு வருடங்களுக்குள் பாதுகாப்பு நிலமைகளைக் கருத்திற்கொண்டு நிலங்கள் விடுவிக்கப்படும். அல்லது அதற்கு மாற்றீடாக காணிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் 5 ஆயிரத்து 299.39 ஏக்கர் நிலப்பரப்பும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1,984 ஏக்கர் நிலப்பரப்பும், வவுனியாவில் 27,230 ஏக்கர் நிலப்பரப்பும், மன்னார் மாவட்டத்தில் 3ஆயிரத்து 299 ஏக்கர் நிலப்பரப்பும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9ஆயிரத்து 148 ஏக்கர் நிலப்பரப்பும் இராணுவத்தினர் வசமுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினர் வசமுள்ளதாக அடையாளம் எனப்படும் கொள்கை வகுப்பு ஆய்வு மையம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..