அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் எமது நாட்டில் இல்லை – தலதா அத்துகோரள சொல்கின்றா! Share

அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் சிறிலங்காவில் இல்லையென நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்தது என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கைதிகளைப் பரிமாறுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இன்னும் சில நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளது. உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் கைதிகள் உள்ளனர். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளமாதிரி அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினரே இல்லை. அவ்வாறு எமது நாட்டிலும் இல்லை எனத் தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..