ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு!! ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!! (photos) Share

விசாரணைகள் எதுவுமின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்பு நடைபெற்றுள்ள அதே நேரம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டமும் நடைபெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம்
முன்பாக இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆளுநர் அலுவலகத்தின் வாயில் மூடப்பட்டு, கலகமடக்கும் பொலிஸார் பெரும் எண்ணிக்கையில்
குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சிறப்பு அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில்
கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு,
அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள், அரசியல்
தலைவர்கள் எனப் பலர் பங்கெடுத்தனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பாதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டது.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளிள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி
வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. வடக்கின்
இயல்பு நிலைமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

 

Image may contain: 5 people, people standing and outdoorImage may contain: outdoorImage may contain: sky and outdoorImage may contain: outdoorImage may contain: motorcycle and outdoorImage may contain: house, sky and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: 4 people, people smiling, people standing, crowd and outdoorImage may contain: one or more people and outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..