17 லட்சம் ரூபாவிற்கு வாங்கிய மது குடித்தும் தனக்குப் போதை ஏறவில்லை என வழக்குத் தாக்கல் !! Share

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு விடுதி மதுவகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கே உலகிலேயே மிகவும் உயர்வான மதுவகைகள் கிடைக்கும்.

அங்கு 17 லட்சம் ரூபாவிற்கு வாங்கிய மது குடித்தும் தனக்குப் போதை ஏறவில்லை என்று சீன எழுத்தாளர் ஷhங் வை குறித்த விடுதி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இங்கு மிக விலை குறைந்த மதுவே 2 இலட்சம் ரூபாவிற்கு அதிகம். இந்நிலையில் எழுத்தாளர் ஷhங் வை அந்த விடுதியில் இருக்கும் மிகவும் விலை உயர்;;ந்த மதுவை 17 லட்சம் ரூபாவிற்கு வாங்கிக் குடித்தார். முழுவதையும் அவர் குடித்தும், அவருக்கு போதை ஏறவில்லை. எனவே மீதம் இருந்த மதுவை ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அது போலியான மதுபானம் எனத் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் குறித்த விடுதியின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..