கொரிய நாட்டுப் பெண்கள் தங்கள் அழகுக்காக இதெல்லாமா செய்வார்கள்! Share

கொரியாவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் சருமத்தை முறையாக பரமாரிக்கிறார்கள் . அடுத்ததாக எப்போதும் சருமத்தை ஈரப்பதத்துடனேயே பராமரிக்கிறார்கள்.

எண்ணெய் பசையுள்ள க்ளன்சர்களை பயன்படுத்துகிறார்கள்.முகத்திற்கு சோப்புக்கு பதிலாக ஃபேஷ் வாஷ் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இது சருமத்தில் இருக்கும் செல்களை உடனடியாக குளிர்விக்கிறது.தண்ணீர் சத்த இருக்கச் செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அதிகம் பாதிப்படையமால் முகம் பளீச்சென்று இருக்கிறது.

பழங்கள் :

கெமிக்கல்கள் கலந்த ஃபேஷ் வாஷினை விட பழங்கள் நிறைந்த ஃபேஷ் வாஷினைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஸ்ட்ராபெர்ரீயை பயன்படுத்துகிறார்கள். அதிலிருக்கும் பிங்க் டிண்ட் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது. ஸ்ட்ராபெர்ரி பழத்தை குழைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக்காக தடவி பத்து நிமிடங்களில் கழுவி விடலாம்.

ஐஸ் :

ஒவ்வொரு பதினைந்து நாளைக்கு ஒரு முறை இதனை செய்கிறார்கள். சருமத்தில் இருக்கும் பிஎச் அளவினை மெயிண்டெயின் செய்வதை முறையாக கவனிக்கிறார்கள்.தினமும் காலையும் மாலையும் முகத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கிறார்கள். இப்படிச் செய்வதால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதோடு பி எச் அளவும் குறையாது.

ஸ்க்ரப் :

கொரியப் பெண்கள் எண்ணெய் பசையுள்ள ஸ்க்ரப்பைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது சருமத் துளைகளில் இருக்கும் அழுக்கை அகற்றுவதோடு சருமத்தில் எண்ணெய்ப் பசையை பராமரிக்கிறது. அதிக வறட்சியடையாமல் வைத்திருக்க உதவுகிறது.

டோனர் :

குளித்த பிறகோ அல்லது முகத்தை கழுவிய பிறகு நாம் மாய்சரைசர் பயன்படுத்துவோம். ஆனால் கொரியாவை சேர்ந்த பெண்கள் மாய்சரைசருக்கு முன்பாக டோனரை பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்வதால் சருமத் துளைகள் விரிவாகமல் இருக்கும். சருமத்தின் டெக்ஸ்சர் மிருதுவாக இருந்திடும்.

கரும்புள்ளி :

சருமத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. கரும்புள்ளி, சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசினால் முகத்தில் கரும்புள்ளி தோன்றிடும். அதனை நீக்க அவர்கள், அடிக்கடி ஸ்க்ரப் மட்டும் பயன்படுத்துவதில்லை.அதற்கு மாறாக சாஃப்ட் பிளாக் ஹெட்ஸ் ஸ்ட்ரிப்ஸ் பயன்படுத்துகிறார்கள். இது முகத்தில் சேர்ந்திடும் நுண்ணிய அழுக்குகளை கூட நீக்கிடுகிறது.

பியர்ல் :

முத்துக்கள்.கொரியப் பெண்களின் அழகுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஒற்றை ரகசியம் இது தான். சந்தையில் கிடைப்பவற்றை எல்லாம் பயன்படுத்துவதை விட முத்து சேர்த்த அந்த அழகுப் பொருளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

லிப் மாஸ்க் :

 அவர்கள் முகத்தை மட்டுமல்ல உதட்டினைக்கூட அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்கிறார்கள். வெயிலினால் தங்கள் உதடு நிறமாறிவிடக்கூடாது என்பதற்காக லிப் மாஸ்க் பயன்படுத்துகிறார்கள். இது உதடு வறண்டிடாமல் பாதுகாக்கிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..