14 வயதான மகளின் 15 வயது நண்பனுடன் தாய் கள்ளக்காதல்!! நடந்தது என்ன? Share

அவுஸ்திரேலியாவில் 36 வயது தாய் ஒருவர் தனது மகளின் நண்பனுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிட்னியை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 14 வயது மகளின் நண்பனான 15 வயது சிறுவனுடன் பழகியுள்ளார்.வீட்டுக்கு வந்த அந்த சிறுவனுக்கு ஆல்கஹால் கொடுத்து அவனுடன் 3 முறை உறவு கொண்டுள்ளார். மேலும் அதுதொடர்பான புகைப்படங்களையும் அச்சிறுவனுக்கு அனுப்பியுள்ளார்.

இதில், அப்பெண்மணி கர்ப்பமானதையடுத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் அச்சிறுவன் தான் குழந்தையின் தந்தை என்பதை அறிந்த மருத்துவர்கள் இதுகுறித்து பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இளம்வயது சிறுவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டது, சட்டப்படி குற்றமாகும். இதனை அடிப்படையாக கொண்டு அப்பெண்ணின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், அப்பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், தனது குழந்தையை பார்த்துக்கொள்ள ஆட்கள் யாரும் இல்லாத காரணத்தால், தன்னை பரோலில் விடுமாறு அப்பெண் கேட்டுக்கொண்டார்.ஆனால், தன்னை காப்பாற்றிக்கொள்ள இப்பெண் பரோல் கேட்கிறார் என்பதால் இதற்கு நீதிமன்றம் மறுத்துள்ளது.

தற்போது குழந்தையானது, அச்சிறுவனின் பெற்றோரிடம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்பெண்மணிக்கு பரோல் கிடைக்க ஏறக்குறைய 2 வருடங்கள் ஆகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..