முட்டுக்காய்த் தேங்காயில் இவ்வளவு விசயங்களா??? யாழ் வைத்திய நிபுணர் சிவன்சுதன் சொல்கின்றார்!! Share

பலவிதமான ஊட்டச்சத்துக்களையும், புரதத்தையும், கனியுப்புக்களையும் கொண்டிருக்கும் முட்டுக்காய்த் தேங்காய்களில் முற்றிய தேங்காய்களிலும் பார்க்கக் கொழுப்பின் அளவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

 எனவே, இவை இலகுவில் சமிபாடடையக்கூடியதாக இருக்கிறது. இதனால் இதனை நோயாளர்களும் பயன்படுத்தலாம்.

முட்டுக்காய்த் தேங்காய்களில் கொலஸ்ரோல் இல்லை. தாவர உணவுகளில் பொதுவாக கொலஸ்ரோல் காணப்படுவதில்லை. ஆனால், சிலவகையான தாவர உணவுகள் உடலினுள் சென்று உடலின் கொலஸ்ரோல் கொழுப்பு வீதத்தைக் கூட்டவல்லன. எனவே, கொழுப்பு அதிகமுள்ள தாவர உணவு வகையைக் குறைத்துக்கொள்வது நல்லது.

முட்டுக்காய்த் தேங்காய்களிலிருந்து கிடைக்கும் இளநீர் குடிப்பதற்கு ஒரு பாதுகாப்பான பானமாகும். இது இயற்கையான ஊட்டச்சத்துள்ள இரசாயனப் பதார்த்தங்கள் சேர்க்கப்படாத ஒரு நல்ல பானமாகும். இதனைப் பலர் பாவிக்காமல் வெளியே ஊற்றிவிடுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். பல்வேறுபட்ட விளம்பரங்களுடன், விற்பனையாகும் சோடா வகைகளுடன் ஒப்பிடும்பொழுது இளநீரை அருமருந்து என்று கூடச்சொல்லலாம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..