17வயது மாணவன் வர்த்தகரின் மனைவியால் வல்லுறவு !! மாணவனின் வாக்குமூலத்தால் பரபரப்பு!! Share

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பெங்களூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயது பெண்மணி எலிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இருவருக்கும் 2 வருடங்கள் முன்பு திருமணமானது.

தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை இல்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 24ம் திகதி முதல் திடீரென அந்த பெண் மாயமாகிவிட்டார்.இதுகுறித்து ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் எலிசா கணவன் புகார் அளித்தார். மனைவி போட்டோவையும் போலீசாரிடம் கொடுத்திருந்தார்.

போலீசார் விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், மற்றொரு திருப்பம் ஏற்பட்டது.எலிசா வீட்டு ஏரியாவை சேர்ந்த 17 வயது சிறுவனை 24ம்  திகதி முதல் காணவில்லை என அவரது தந்தை ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார்.

அப்போது போலீசாரின் டேபிளில் எலிசாவின் போட்டோ இருப்பதை பார்த்த அவர் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். போலீசார் எலிசாவை காணவில்லையெனக் கூறியுள்ளனர்.ஓடிப்போன ஜோடி அப்போது சிறுவனின் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏற்கனவே எலிசா தனது மகனுடன் நெருக்கம் காட்டுவதாக சிலர் கூறி அவர் கேள்விப்பட்டிருந்தார். அதை போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவத்தன்று தங்கவயல் பஸ் நிலையத்தின் அருகே இருந்த சி.சி.டிவிகளை சோதித்து பார்த்தனர்.

அப்போது ஆந்திரா செல்லும் பஸ்சில் சிறுவனும், எலிசாவும் போனது தெரியவந்தது.போலீசார் இருவரையும் வலை வீசி தேடி வந்த நிலையில், தமிழகத்தின் வேளாங்கன்னி நகரிலுள்ள ஒரு லாட்ஜில் இருவரும் இருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணை கைது செய்து சிறுவர்களை பாலியல் சீண்டலில் இருந்து பாதுகாக்கும் ‘போஸ்கோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயதுடைய நபர் என்பதால் எலிசா மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மருத்துவ பரிசோதனை முன்னதாக, மருத்துவமனையில் இருவருக்கும் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், எலிசாவும், அந்த சிறுவனும் உடல் ரீதியாக உறவு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இதை பலாத்காரம் என சொல்வதை ஏற்க எலிசா மறுத்து வருகிறார். தாங்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறிவருகிறாராம்.

இதே வேளை தானும் வர்த்தகரின் மனைவியும் மனதார காதலித்து வந்ததாக குறித்த 17 வயது மாணவன் பொலிசாரிடம் வாக்குமூலம் கூறியுள்ளான். இதென்னடா கொடுமை!

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..