மனைவியை பணக்காரர்களின் பாலியல் தேவைகளுக்காக வாடகைக்கு விடும் கணவன்மார்…!! எங்கே? Share

இந்திய மத்தியபிரதேச மாநிலத்தின் ஷிவ்புரி பகுதியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் கணவன்மார்கள் தங்கள் மனைவியை மாதாந்திர மற்றும் வருடாந்திர முறையில் வாடகைக்கு விடுகிறார்கள்.

மனைவியில்லாத பணக்காரர்களுக்கு தான் தங்கள் மனைவிகளை வாடகைக்கு தருகின்றார்கள்.இதற்காக 10-லிருந்து 100 ரூபாய் முத்திரை தாளில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகின்றது.வாடகையாக சில ஆயிரங்களை கணவன்மார்கள் பெற்று கொள்கிறார்கள்.ஒப்பந்த காலம் முடிந்ததும் வேறு பணக்காரர்களுடன் ஒப்பந்தம் போடப்படுகிறது. அவர்களுடன் சென்று மனைவிகள் வாழ வேண்டும்.

இந்த வினோத கலாசாரத்துக்கு தடீச்சா பிரதா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மட்டுமில்லாமல் குஜராத்திலும் இது போன்ற விடயங்கள் அரங்கேறுகிறது.கடந்த 2006-ல் குஜரத்தில், கணவர் ஒருவர் தனது மனைவியை மாதம் 8000 ரூபாய்க்கு பணக்கார தொழிலதிபருக்கு வாடகைக்கு விட்டார் என்ற சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல, சில பழங்குடிமக்கள் தங்கள் மகள்களை தரகர்கள் மூலம் பணக்காரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்.

இதற்காக தரகர்கள் 65000-லிருந்து 70000 வரை பணம் பெற்று கொண்டு வெறும் 20000 வரை தான் மகள்களின் பெற்றோருக்கு தருகிறார்கள்.சில இடங்களில், பெண்களை 500 ரூபாய்க்கு விற்கும் நிகழ்வுகளும் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..