பெண்களுக்கு மட்டும் : இதை குடித்தால் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்! Share

தவறான உணவு பழக்க முறைகள், சுகாதாரமற்ற உள்ளாடைகளை அணிவது, சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தல் மற்றும் மாதவிலக்கு தூண்டும் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது போன்ற காரணத்தினால் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது.



மேலும்  இந்த பிரச்சனையானது ஊளைச்சதை, ரத்தசோகை பிரச்சனை, உடல் உஷ்ணம், உடலுறவில்
அதிகமாக ஈடுபடுதல், சுய இன்பம் காணுதல், அதிகப்படியான மன உளைச்சல்,

தூக்கமின்மை கல்லீரல் பாதிப்பு மற்றும் பூஞ்சை நோய் தொற்றுக்கள் போன்றவைகளாலும் ஏற்படுகிறது.

வெள்ளைப்படுதல் பிரச்சனையை போக்க சில டிப்ஸ்:

* சப்ஜா விதையை பொடி செய்து, ஒரு ஸ்பூன் எடுத்து அதை பாலில் கலந்து சாப்பிடலாம்.

* வல்லாரைக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு அரைத்து, அதை ஆட்டுப்பாலில்
கலந்து சாப்பிடலாம்.

* அருகம்புல் 2 கைப்பிடி மற்றும் கீழாநெல்லி 1 கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து அதை
எருமைத் தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

* 2 செம்பருத்தி பூ, சிறு துண்டு வெண்பூசணி போன்றவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துச் சாறு
எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

* நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சனைகள் தீரும்.

* புளியம் பழத்தின் தோல், முருங்கைக்காய் மற்றும் சுக்கு ஆகிய மூன்றையும் சேர்த்து கஷாயம்
செய்து குடிக்கலாம்.

* மாம்பழத்தின் கொட்டையை எடுத்து அதனை காயவைத்து பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து
சாப்பிடலாம்.

* கொள்ளு வேகவைத்து அந்த நீரை குடித்து வந்தால், மாதவிலக்கு பிரச்சனையை தடுக்கலாம்.

* பேரீச்சம்பழம் மற்றும் கொத்தமல்லி இலை ஆகிய இரண்டையும் அரைத்து, அதை பசும்பாலுடன்
கலந்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்.

* உளுத்தம் பருப்பை நன்கு நெய்யில் வறுத்து பின்னர் பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து,
அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com