சர்க்கரை வியாதியால் தாம்பத்ய உறவுக்குள் விரிசலா?? கவலை வேண்டாம் இதோ தீர்வு.. Share

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது.

இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.

ஆண்களுக்கு விரைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம். ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, டென்ஷன், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.இதனால்தால் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன.

இரத்த நாளச் சுவர்களில் இருந்து நைட்ரிக் ஆக்ஸைடு என்ற ரசாயனப் பொருள் வெளியிடப்பட்டு இரத்தத்தில் கலந்து செல்கிறது. இந்த ரசாயனப் பொருள்தான் ‘ரசாயனத் தூதுவர்’ மாதிரி செயல்பட்டு ஆணுறுப்பின் மென்மையான தசைகள் மற்றும் இரத்த நாளங்களை விரிவடையுமாறுத் தூண்டுகிறது.

அதிகமான இரத்த சர்க்கரை இருக்கும்போது இரத்தத்தில் கலக்கப்படும் நைட்ரிக் ஆக்ஸைடு வெளியிடப்படுவதையே தடுத்துவிடுகிறது. இரத்தத்தில் நைட்ரிக் ஆக்ஸைடு குறைந்து விடுவதால் ஆணுறுப்புக்கு வரும் இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தையும் குறைகிறது. நாளடைவில் இரத்த நாளங்கள் கேடுற்று பழுதாகிச் சிதைத்து விடுகின்றன.

ஆணுறுப்பு இரத்த நாளங்களை மட்டுமின்றி, உடலின் எல்லா பகுதியிலுமுள்ள இரத்த நாளங்களுக்குச் செல்லும் நைட்ரிக் ஆக்ஸைடையும் சர்க்கரை தடுப்பதால்தான் இரத்த நாள பாதிப்புகள் ஏற்படுகிறது.

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 73வீத அளவுக்கு அதிகமான இரத்த அழுத்தமும், சர்க்கரை வியாதியும் சேர்ந்து இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இரத்த நாளசிதைவை உண்டாக்குவதாக அமெரிக்கா ஆய்வுகள் கூறுகின்றன.

இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகள், இரத்த நாளசுவர்களில் படிந்து, அவற்றைச் சுருக்கிவிடுகின்றன. இந்த நிலையில் இரத்த நாளங்கள் விரிவடைவதில் சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒருவேளை விரிவடைந்தாலும் அதில் நைந்து கிழிந்துவிடும். இரத்தக் கொழுப்புடன் சர்க்கரை நோயும் சேர்ந்திருக்கும்போது பாதிப்பின் அளவு அதிகரித்து விரைப்பு ஏற்படாத நிலை உண்டாகிறது.

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இரத்த நாளங்கள் சுருங்குவதால் அவை விரிவடைவதில் சிக்கல்கள் இருக்கும். சர்க்கரை வியாதியும் இதனோடு சேர்ந்து கொள்வதால் இரத்த நாளங்கள் விரைப்படையாமல் ஆண்மைகுறையாகிறது.

“நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை,
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்”

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழி முறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர். இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒரு முறை தான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

“நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும். நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை அடுத்து தூதுவளை, பசலை கீரை, அரைக்கீரை”

இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே!.

எலுமிச்சம்பழம் சாற்றை அதிக அளவில் பயன்படுத்தினால் விந்து நீர்த்து விடும். மேலும் தொடர்ந்து 10 எலுமிச்சை விதைகளை அரைத்து ஒருவன் 40 நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் அவன் ஆண்மையற்றவனாய்ப் போய்விடுவான் என்று சித்தநூல் கூறுகிறது.

குறிப்பிட்ட அத்தினங்களில் தாம்பத்ய உறவு கொள்ளும் முன் சிறிய வெங்காயம் ஒன்றை வாய்க்குள் அடக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாற்றை உள்ளே இறக்க வேண்டும். உறவு முடியும் வரை வாய்க்குள் வெங்காயம் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் வெற்றியில் முடியும்.

சாதிக்காய், குல்கந்து, காமஸ்துகி வகைக்கு 20 கிராம். பழைய வெல்லம், இலவங்கம், சாம்பிராணி, கவாப்பு சின்னி வகைக்கு 10 கிராம் எடுத்து வெல்லத்தைத் தவிர மற்றவற்றை நன்றாக இடித்துப் பின்னர் தேன்விட்டுக் குழைத்துத் தினமும் மாலையில் ஒரு கோலியளவு சாப்பிட்டுப் பசும்பால் சாப்பிடவும். இவ்வண்ணம் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் – உடலுறவில் தோல்வி என்பது இராது.

மருந்து உண்ணும் பொழுது உடலுறவு கூடாது. மது மாமிசம் சாப்பிடக்கூடாது, உணவில் புளி சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.

நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது

1.வெங்காயம்

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் உங்களுடைய பாலுணர்வு அதிகரிப்பதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு உறவு கொள்ள முடியும். அதற்கு ஒரு தேக்கரண்டியில் பச்சை வெங்காயத்தின் விதைகளை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து விடுங்கள். இதனை நன்றாக கலக்கி விட்டு, ஒவ்வொரு முறை சாப்பிடும் முன்னர் குடியுங்கள். இதன் மூலம் உங்களுடைய சக்தி உறுதிப்படும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப்படுத்த முடியும்.

வெள்ளை வெங்காயத்திலும் கூட பாலுணர்வைத் தூண்டக் கூடிய குணங்கள் இருப்பதால், உங்களுடைய இனப்பெருக்க உறுப்புகள் உறுதிப்படுவதுடன், முன்கூட்டியே விந்து வெளியேறுவதையும் தடுக்க முடியும். மேலும், வெங்காயத்தை சாதாரணமாக சாப்பிடுவதால் அதன் பாலுணர்வு ரீதியான பலன்களை எளிதில் பெற்றிட முடியும்.

2.அஸ்வகந்தா

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆயர்வேத சிகிச்சை முறையான அஸ்வகந்தா, முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் உட்பட, ஆண்களிடம் உள்ள எண்ணற்ற பாலியல் பிரச்சனைகளை தீர்ப்பதாக உள்ளது.

முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப்படுத்தி, நீண்ட நேரத்திற்கு செக்ஸ் அனுபவத்தை நீட்டிக்கச் செய்யும் முக்கியமான காரணியான பாலுணர்வை அதிகரிக்கும் மூலிகையாக அஸ்வகந்தா உள்ளது. உடலுறுதியை அளிக்கக் கூடியதாகவும் மற்றும் ஆண்மையிழப்பை குறைப்பதையும் அஸ்வகந்தா செய்கிறது.

3.இஞ்சி மற்றும் தேன்

உடலின் வெப்பத்தை அதிகரித்து,இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் செயலை இஞ்சி செய்கிறது. இஞ்சியை சாப்பிடுவதன் மூலம் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் விறைப்பைத் தன்மை அதிகரிக்கும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்படும். அதற்கு அரை தேக்கரண்டியளவு இஞ்சியையும், அதே அளவுக்கு தேனையும் எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும். நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன்னர் இதை குடித்து விட்டால், மாற்றத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்.

4.வெண்டைக்காய்

வெண்டைக்காயை அரைத்து எடுக்கப்பட்ட பவுடருக்கு முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைத் தடுக்கும் குணம் உள்ளது. 10 கிராம் அளவுக்கு இந்த பவுடரை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டிகள் சர்க்கரையை இதில் கலந்து, ஒவ்வொரு நாள் இரவிலும் குடித்து வாருங்கள். இதனை ஒரு மாதத்திற்காவது பயன்படுத்தினால் உங்களுடைய உடலில் ஆச்சரியப்படக் கூடிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையையும் சமாளித்திட முடியும்.

5.பூண்டு

முன்கூட்டியே விந்து வெளிப்படுவதையும், ஆண்களின் மற்ற பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியதாக பூண்டு உள்ளது. 3-4 பூண்டுகளை சாப்பிட்டால் முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையில் பெருத்த மாற்றம் நிகழ்வதையும், நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதையும் உணர முடியும். அதிலும் பூண்டை சுத்தமான பசு நெய்யுடன் சேர்த்து வறுத்து, ஆற வைத்திருந்தால், அதனுடைய பாலுணர்வூட்டும் குணம் பாதுகாக்கப்படும். விறைப்புத் தன்மையில் ஏற்படும் பிரச்சனைகளையும், முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கக்கூடிய மருந்தாக பூண்டு உள்ளது.

6.கேரட் மற்றும் முட்டை

இரண்டு கேரட்டுகளை துருவி, அதனை பாதியளவு வேக வைக்கப்பட்ட முட்டையின் மேல் தூவி பின் அதன்மேல் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றிக் கொள்ளவும். இந்த கலவையை மூன்று மாதங்களுக்கு தினமும் சாப்பிட்டு வரவும். மெதுவாக உங்களிடம் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள் மற்றும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த மாற்றம் முழுமையாக நிகழும். மேலும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன், இந்த சிகிச்சையை நிறுத்தி விடலாம்

7.அஸ்பாரகஸ்

வேர் தண்ணீர் விட்டான் கொடி எனப்படும் அஸ்பாரகஸ் கொடியின் வேரைக் கொண்டும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைக் கட்டுப்படுத்த முடியும். 20 கிராம் அஸ்பாரகஸ் வேரை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் ஒரு டம்ளர் பாலுடன் வேரை சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் அதனை வடிகட்டி அருந்தலாம். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையை முழுமையாக சரி செய்திட முடியும்.

8.இயற்கையாகவே பாலுணர்வூட்டும் உணவுகள்

இயற்கையாகவே பாலுணர்வூட்டும் உணவுகள் உங்களுடைய பாலுணர்வை அதிகரிக்கவும், முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை தடுக்கவும் செய்கிறது. கேரட், பெருஞ்சீரகம்/சோம்பு, செலரி, வாழைப்பழம், பூண்டு, வெங்காயம், இஞ்சி, கடல் சிப்பி, முள்ளங்கி ஆகியவை இயற்கையாகவே பாலுணர்வூட்டும் உணவுகளாகும். இந்த உணவுகளை உங்களுடைய தினசரி உணவில சேர்த்துக் கொள்வதன் மூலம் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது போன்ற, பாலியல் தொடர்பான பிரச்சனைகளிலிலிருந்து விடுபட முடியும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..