தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் தேர்தல் அணி உதயமாகியது (photos) Share

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட புதிய அணி இன்று பிற்பகல் 2 மணிக்கு உடன்படிக்கை கைச்சாத்திட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின்யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று நண்பகல் ஆரம்பமான கூட்டத்தையடுத்து இந்த புதிய அணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, சரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், தமிழரசுக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணித்தலைவர் சிவகரன் தலைமையிலான ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி, ஈரோஸ், திருகோணமலையைத் தளமாகக் கொண்டு இயங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் 3 பொது அமைப்புக்கள் இணைந்து இந்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டன.

செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ கட்சி இந்த அணியுடன் இணைய இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்தக் கட்சியினரும் இந்த உடன்படிக்கையில் இன்று மாலைக்குள் கைச்சாத்திடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Image may contain: 3 people, people sitting and indoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..