சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர் மீது துன்னாலையில் தாக்குதல் Share

துன்னாலை பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மேற்படி உத்தியோகத்தரான சிறி என்ற நபர் மீது அதே பகுதியினை சேர்ந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..