முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியில் குண்டு வெடித்ததால் பரபரப்பு!! (Photos) Share

முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று மாலை குண்டு உள்ளிட்ட சில வெடிபொருட்கள் வெடித்ததில் அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.


அடையாளம் தெரியாத சிலரினால் குறித்த பகுதியில் தீ முட்டப்பட்டுள்ளது.

இதன்போது அவ்விடத்தில் இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட நிலையில் இருந்த
வெடிபொருட்களே வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட
பிரதேசங்களில் ஆபத்தான வெடிபொருட்கள் இன்னமும் மீட்கப்படாத நிலையில் காணப்படுவதாக
அப்பகுதி பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Image may contain: sky, tree, outdoor and nature

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..