யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளராக வித்தியாதரன்?? Share

யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான என்.வித்தியாதரனை நிறுத்துவதில் தமிழ் அரசுக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

வித்தியாதரனை மேஜர் வேட்பாளராக நியமிப்பதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர். எனினும் அவரை வேட்பாளராக நியமிப்பதில் அவரது உறவினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர்கள் ஆனொல்ட், ஜெயசேகரன் ஆகியோரில் ஒருவரை மேயர் வேட்பாளராக நியமிக்கவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் முயற்சித்தனர். எனினும் இந்த முயற்சி கொள்கையளவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சியால் இன்று மாலை இடம்பெறும் கூட்டத்தையடுத்து ஊடகங்களுக்கு வெளியிடப்படும் அறிவிப்புகளில் இறுதித் தீர்மானம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..