இந்த ஓர் பொருளை உணவில் சேர்த்துக் கொண்டால் மார்பக புற்றுநோய் வராது என்பது தெரியுமா? Share

மஞ்சள் இந்தியாவில் தான் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள். அதனை தினமும் சமையலில் உபயோகப்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் உண்டு என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.


மஞ்சள் உணவில் சேர்ப்பதால், புற்றுநோயை உருவாக்கும் கேன்ஸர் செல்களை தடுக்கலாம் என உலக அளவில் மருத்துவத் துறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு போதுமான ஆதாரங்களையும் தந்துள்ளது.

மார்பக புற்றுநோய் தடுக்கும்:
யுகே இல் மார்பக புற்றுநோய் இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் உள்ளது. இதற்கு இந்திய மக்கள் தங்கள் உணவினில் சேர்க்கும் மஞ்சளே காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவுத்துள்ளனர்.
ட்ரைக்ளோகார்பன் என்கின்ற கெமிக்கல் வீட்டை சுத்தப்படுத்தும் க்ளீனிங்க் ஏஜென்டில் உள்ளது. அவை உண்ணும் பொருட்களிலும், உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களிலும் சேர்ப்பதால், அவை நமக்கு தெரியாமலே உடலுக்குள் சென்று சாதாரண செல்களை கேன்ஸர் செல்களாக மாற்றுகிறது.

ஆனால் நாம் தினமும் மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, இந்த ட்ரைக்ளோ கார்பன் செயலை தடுக்கிறது. இதனல் மார்பக புற்றுநோய் வராமல் மஞ்சள் காக்கிறது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
குடல் புற்று நோயை தடுக்கிறது :

மஞ்சள் உணவில் சேர்த்தால், குடும்பத்தில் முன்னமே யாருக்காவது குடல் புற்றுநோய் இருந்தால், அது பிள்ளைகளுக்கு வராமல் காத்து உதவுகிறது.
அதேபோல் புற்றுநோய் இருந்தால், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி, கேன்ஸர் செல்களை மேலும் பெருக விடாமல் தடுக்கிறது.

புற்றுநோய் வராமல் காப்பது போல, தாக்கப்பட்ட நோயின் தீவிரத்தை குறைப்பதும் பெரிய விஷயம்தானே. அதனை மஞ்சள் செய்கிறது. ஆகவே வருமுன் காப்போம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, மஞ்சளை எல்லாவற்றிற்கும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கல்லீரல் புற்று நோய் :
ஹெபடைடிஸ் பி மற்றும் சி மிக மோசமான வைரஸால் உருவாகும் கல்லீரல் நோயாகும். அதனை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் கல்லீரலையே பாதிக்கும். கேன்ஸர் வரவும் வாய்ப்புள்ளது.
இந்த ஹெபடைடிஸ் நோய் வராமல் காக்க மஞ்சள் உதவுகிறது. மஞ்சள் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்களை அழிக்கிறது.

வெளிநாடுகளில் மருத்துவர்கள் மஞ்சளை சப்ளிமென்ட்ரியாக எடுத்துக் கொள்ள நோயாளிகளிடம் அறிவுறுத்துகிறார்கள். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நம் மஞ்சள்.
மிக பழமையான காலத்திலிருந்தே அதனை உபயோகபப்டுத்த தொடங்கிவிட்டோம். இப்போது மஞ்சளை வணிகமயமாக்கி, பொருளாதார லாப நோக்கத்தோடு, மஞ்சளில் கலப்படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இது உடலுக்கு இன்னும் மோசமான விளைவுகளையே தரும்

ஆகவே கடைகளில் மஞ்சள் வாங்காமல், மஞ்சள் கிழங்குகளை வாங்கி அரைத்து உபயோகப்படுத்துவது உத்தமம். அதன் மருத்துவ குணங்களை அப்படியே பெறுவீர்கள். எந்த நோயும் நம்மை தீண்டாமல் வளமாக வாழலாம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..