வளர்ப்பு நாயால் வந்த விபரீதம் Share

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாகாணத்தில், பெத்தனி ஸ்டீஃபன்ஸ் என்ற 22 வயதுடைய பெண், அவருடைய நாய்களால் கொல்லப்பட்டமை குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

பெத்தனியின் உடல் கண்டெடுக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின், அவரின் மரணம் குறித்த விவரங்களை தெரிவிக்கவும், அது குறித்து நிலவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் , காவல்துறை இரண்டாவது செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளது.

பெத்தனி வளர்த்துவந்த நாய்களை, காவல்துறையினர் முதன்முதலில் பார்த்தபோது, அவற்றின் அருகில் இருப்பது ஏதோ ஒரு விலங்கின் உடல் பாகங்களே என அவர்கள் நினைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சடலம் பெத்தனியுடையது எனக் கூறிய அதிகாரிகள், அந்த பிட்புல் வகை நாய்கள், அவரது உடலைத் தின்றுகொண்டிருந்ததாகக் கூறினர்.

“நானும், மற்ற நான்கு அதிகாரிகளும் கவனித்தபோது, நாய்கள் விலா எலும்பை திண்றுகொண்டு இருந்தன” எனவும், “தொண்டையிலும், முகத்திலும் ஏற்பட்ட காயத்தாலேயே அவர் உயிரிழந்தார்” எனவும் கூச்லாண்ட் கவுண்டியின் காவல்துறை அதிகாரியான ஜிம் ஆக்நியூ தெரிவித்ள்ளாதுள்ளார்.

அவர் கீழே தள்ளப்பட்ட பிறகு, நாய்கள் அவரைக் கொன்றுள்ளன எனவும் தெரிவித்த காவல்துறை அதிகாரி, முதலில், குடும்பத்தினரை மனதில் வைத்து, இந்த மரணம் குறித்த துல்லியமான விவரங்களை வெளியிட வேண்டாம் என நினைத்ததாகத் தெரிவித்தார்.

எனினும், இது குறித்து பல வதந்திகள் பரவத் தொடங்கியதாலும், பல தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியதாலும், யாரும் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டு தப்பவில்லை என்பதை விளக்குவதற்காக, இந்த தகவல்களை வெளியிட்டதாகக் அவர் தெரிவித்தார்.

குட்டிகளாக இருந்தது முதல், அந்த நாய்களை எடுத்து வளர்த்த பெத்தனியை, நாய்கள் எதற்காக கொல்லவேண்டும் என்ற கேள்வியை அவரின் நண்பர்கள் முன்வைத்துள்ளனர். அந்த நாய்கள் மிகவும் சாந்தமானவை என்று கூறிய, பெத்தனியின் தோழியான பார்பரா, “அவை தங்களின் முத்தங்களால் நம்மை கொல்வன” என கூறியுள்ளார். இந்த இருநாய்களின் மொத்த எடை, 45 கிலோ எடையுள்ள பெத்தனியின் எடையைப் போல இருமடங்கு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“பெத்தனி மிகவும் கொடுமையாக காயமடைந்திருந்தார், அவர் இறந்து கொஞ்ச நேரம்
ஆகியிருந்தது என்பது தெரிந்தது” என்றும், அவரின் உடல் மிகவும் சிதைந்திருந்ததாகவும், தெரிவித்த அக்கியயூ அவரின் உடலில் இருந்த காயங்கள் எதனுடனும் ஒப்பிடத்தக்கவை அல்ல” என்று கூறினார்.

அவரின் தலையில் இருந்த, கடித்த காயங்களின் தடங்கள், நாய்களின் பல்தடங்களுடன்
ஒத்துப்போவதாகவும், கரடி போன்ற வேறு எந்த மிருகத்தின் பல் தடத்துடனும் அவை
ஒத்துப்போகவில்லை என்றும் தெரிவித்த காவல்துறை அதிகாரியான ஜிம் ஆக்நியூ, குடும்பத்தினரின் அனுமதியோடு, அந்த நாய்கள் கொல்லப்பட்டதாகவும், தற்போது அவற்றின் உடல்கள், பிரேதப்பரிசோதனைக்காக, பாதுக்காத்து வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..