யாழ்ப்பாண காவாலிகளின் பெற்றோரை அழைத்து பொலிஸ் அதிகாரி என்ன செய்தார்? (Video) Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர்களுக்கு இந்த அறிவுரை வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..