அமெரிக்காவில் இந்தியருக்கு மரண தண்டனை ! விஷ ஊசி ஏற்ற உத்தரவு ! (Photos) Share

வாஷிங்டன்: இரட்டை கொலை வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்தவர் ரகுநந்தன் யந்தமுரி(29) என்பவருக்கு பிப்ரவரி 23ம் தேதி மரணதண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

ரகுநந்தன் யந்தமுரி என்பவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்திற்கு சென்ற அவர் அப்பர் மெரியன் டவுன்ஷிப் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

அதே குடியிருப்பில் தங்கியிருந்த ஒரு தெலுங்கு குடும்பத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த குடும்பத்தில் கணவன், மனைவி வேலைக்கு செல்வதால் அவர்களின் 10 மாத குழந்தையை அவரது பாட்டி சத்யாவதி (61) கவனித்துக் கொண்டார். இந்நிலையில் பணத்திற்காக அந்த குழந்தையை கடத்த ரகுநந்தன் திட்டம் தீட்டினார். அதன்படி அங்கு சென்று குழந்தையை கடத்த முயன்றுள்ளார். ஆனால் குழந்தையை கடத்தவிடாமல் பாட்டி தடுத்துள்ளார்.

இதையடுத்து கோபம் அடைந்த ரகுநந்தன் அவரை தீர்த்துகாட்டினார். பின்னர் குழந்தை அழுவது தடுக்க அதன் வாயில் துணியை திணித்து ஒரு பெட்டிக்குள் வைத்து எடுத்துச் சென்று குழந்தையை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு ரகுநந்தனை கைது செய்தனர். இந்த வழக்கில் ரகுநந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பணம் கேட்டு மிரட்டல்

இது தொடர்பாக வெங்கட கொண்ட சிவாவின் குடும்ப நண்பர் ரகுநந்தன் யந்தாமுரி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை சான்வியை கடத்திய நபர் யந்தாமுரி ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பிய செய்தியில், பெற்றோரின் செல்லப் பெயர்களைச் சொல்லி பணம் கேட்டிருந்தார்.

குடும்ப நண்பர் கைது

இதையடுத்து, வெங்கட வென்னா மற்றும் செஞ்சு லதா ஆகியோரிடம், அவர்களது செல்லப் பெயர்களை அறிந்தவர்களின் பட்டியல் பெறப்பட்டது. இதில் மற்ற அனைவரும் இந்தியாவில் இருக்க, ஒரே ஒருவர் மட்டுமே அமெரிக்காவில் இருந்தார்.அவர்தான் ரகுநந்தன் யந்தாமுரி. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்தான் சத்யாவதி வென்னாவைக் கொன்று குழந்தையைக் கடத்திச் சென்றதும், குழந்தை அழுததால், வாயில் துணியை அடைத்து சூட்கேசில் மூடி வைத்ததாக தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

மரணதண்டனை

இந்த கொலை வழக்கு பென்சில்வேனியா நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமையன்று யந்தாமுரி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். பச்சிளம் குழந்தையையும், பாட்டியையும் கொடூரமாக கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதை அடுத்து ரகுநந்தன் யந்தாமுரிக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தார்.

Image may contain: 3 people, people smiling, people sitting, child and close-upImage may contain: 5 people, people standingImage may contain: 4 people, people standing

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..