மட்டக்களப்பு விபத்தில் மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர் பலி (Photos) Share

சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேப்பையடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர் பலியாகிய சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

செங்கலடியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை-வாசன் (34) என்பவர் பலியாகியுள்ளார். இவர்
கல்முனைக்கு தனது கடமைக்கு செல்லும் போது வேப்பையடி பிரதான வீதியல் பிள்ளையார்
ஆலயத்திற்கு முன்பு பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதில் இவர்
தலத்தில் பலியாகியுள்ளார். இவரின் சடலம்  மண்டூர் மகப்பேற்று வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுளது. சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு
வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..