இன்றைய ராசிபலன் 12.01.2018 Share

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங் களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். பொறுப்பு ணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்மம்: நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால்  வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் புது அனு பவம் உண்டாகும். வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்து பிரச்னைக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்: மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அழகு, இளமை கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டு மென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உரிமையோடு யாரிடமும்  வரம்பு மீறிப் பேச வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். அசதி,  சோர்வு வந்து நீங்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்: புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார் கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய் வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்று வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள் வி.ஐ.பிகள் அறிமுக மாவார்கள் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப் படும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக செயல் படுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். உற்சாகமான நாள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..