7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி படுகொலை Share

பாகிஸ்தான் – லாகூரின் தெற்கே உள்ள கசூரில் நேற்று முன் தினம் (09) தினங்களுக்கு முன்பு குர்ஆன் வகுப்புக்குச் சென்றபோது காணாமல் போன ஜைனப் எனும் ஏழு வயது சிறுமியின் உடல் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது.

 

குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு. கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அங்கு நேற்று (10) போராட்டம் வெடித்தது.

கசூரில் உள்ள காவல்துறை தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அதில் இருவர் கொல்லப்பட்டனர்.

கடத்தல்கள், பாலியல் தாக்குதல்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராக அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜைனபின் கொலை பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. பிரபல கிரிக்கெட் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் கொலையாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

புகார் தெரிவிக்கப்பட்ட பின்னரும் காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தங்கள் உறவினர்களே ஜைனப் காணாமல் போனதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண் கை பிடித்து அச்சிறுமியை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ள அந்தக் காணொளி பாகிஸ்தான் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், குற்றவாளியைப் பிடித்திருக்கலாம்” என்று சௌதி அரேபியாவில் இருந்து இஸ்லாமாபாத் திரும்பியுள்ள அச்சிறுமியின் தந்தை ஜியோ தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..