வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு (Photos) Share

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

இன்று அதிகாலை வவுனியா புகையிரத நிலைய வீதியில் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் ஏனைய இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இருந்தும் சிகிச்சை பயனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வைரவ புளியங்குளத்தைச் சேர்ந்த பிரதாப் வயது 21,ரட்னபுரி பகுதியை சேர்ந்த பிரகாஸ்(யுகு) வயது 24 ஆகிய இளைஞர்களே விபத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 1 person, standingImage may contain: car and outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..