ஆனந்தசங்கரியின் கைப்பிள்ளை துரைராஜசிங்கம் இன்று சொல்வதென்ன? வரலாறு முக்கியம் அமைச்சரே! Share

சூரியனில் தேர்தலிற்கு வந்தவர்கள் குறுக்குவழியில் வாக்குகளை பெற நினைக்கிறார்கள் என தமிழரசுக்கட்சியின் செயலாளர். கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

 

வவுணதீவு பிரதேசசபையை தமிழர் விடுதலை கூட்டணி கைப்பற்றுனெ எதிர்பார்க்கப்படும் சூழலில், துரைராஜசிங்கம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக மற்ற கட்சிகளின் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை துரைராஜசிங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2000 இன் தொடக்கத்தில் எதிர்பாராதவிதாக எம்.பியான துரைாஜசிங்கம், நாட்டைவிட்டு ஏன் தப்பிச்சென்றார் என்ற கடந்தகால வரலாற்றையும் மீட்டிப்பார்ப்பது இப்பொழுது பொருத்தமாக இருக்கும்.

யப்பானிய விசேட தூதர் யசூசி அகாஷியிடம் ஆனந்தசங்கரி ஆனையிறவை பற்றி பேசினார் என கூறி, அவர் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எதிர்ப்பு எழுந்த சமயம். சங்கரி மீது கூட்டமைப்பின் பிராந்திய கிளைகள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துகொண்டிருந்த சமயத்தில், அதை துரைராஜசிங்கம் எதிர்த்தார். அம்பாறை மத்தியகுழு கூட்டத்தில் ஆனந்தசங்கரிக்கு எதிரான பிரேரணை கொண்டுவரக்கூடாதென கடும் பிரயத்தனம் செய்து, அது பலனளிக்காத நிலையில் சகலபொறுப்புக்களிலுமிருந்து விலகினார்.

ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக செயற்பட்டு, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் “கவனிப்பதை போல கவனித்ததை“ அடுத்து நாட்டைவிட்டு தப்பி சென்றவர், யுத்தம் முடிந்ததும் இலங்கைக்கு திரும்பி, அதிதீவிர தேசியவாதியாக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 1 person, standingNo automatic alt text available.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..