மகிந்தவின் பாதுகாப்பு பிரதானிக்கு 17, மனைவிக்கு 16!! அப்படி என்ன உள்ளளது அவர்களிடம்!! Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரதானியாக செயல்பட்ட மேஜர் நெவில் வன்னியாராச்சி பெயரில் 17 வங்கிக் கணக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

அத்துடன், அவரின் மனைவியான கிருஷ்ணா மதுரங்கி ரணமுகாராச்சியின் பெயரில் 16 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன.

நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக லஞ்ச, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2010 - 2014 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேஜர் நெவில் தனது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருந்த அநேகருக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், நெவில் வன்னியாராச்சியும், பல்வெறு வழிகளில் சொத்து, பணம் சேகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேஜர் நெவிலின் பெயரில் பேருந்து, டிபர் உள்ளிட்ட பல வாகனங்கள் இருப்பதாகவும், மேஜர் பதவியை வகிக்கும் ஒருவர், இந்தளவு சொத்துக்களை எவ்வாறு உழைத்தார் என்பது பாரிய சந்தேகம் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பல வங்கிகளில், பல கணக்குகளைப் பேணி வருவது குறித்து, பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மேற்கொண்ட முறையற்ற கொடுக்கல். வாங்கல்களுக்கு இந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

இதனிடையே, நெவில், மேஜர் என அடையாளப்படுத்தப்பட்டாலும், அவர் முறையற்ற விதத்தில் பதவியுயர்த்தப்பட்டவர் என சரத் பொன்சேகா பகிரங்காக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..