துருக்கியில் தரையிறங்கமுற்பட்ட விமானம் சற்று முன் விபத்துக்குள்ளான காட்சிகள் இதோ (Video) Share

துருக்கியின் ட்ரப்சோன் (Trabzon) விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்க முற்பட்ட விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதால் அவ்விமான நிலையம் சிறிதுநேரம் மூடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.துருக்கியின் தலைநகரான அங்காரா விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட 737 -800 எனும் இலக்கமுடைய விமானம், ட்ரப்சோன் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது  ஓடுபாதையை விட்டு விலகிச்சென்று கருங்கடலில் விழ முற்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்விமானம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் மேற்படி விமானத்தில் பயணித்த 162 பயணிகளும் விமானியும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தைத்  தொடர்ந்து  ட்ரப்சோன் விமான நிலைய, விமான சேவைகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டதுடன் விமான நிலையமும் சிறிதுநேரம் மூடப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..