ஆண்டாளை தவறாகப் பேசிய கவிஞர் வைரமுத்துவின் அந்த உறுப்பை அறுத்தால் 10 லட்சம் பரிசு!! Share

திருநெல்வேலி: ஆண்டாள் பற்றி தவறாக பேசிய கவிஞர் வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10 லட்சம் வழங்குகிறேன் என்று பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் மிரட்டலாக பேசியுள்ளார்.தினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் கடந்த வாரம் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக இருந்தது. ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்கில் இருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.

வருங்காலங்களில் இந்துக்களை பழித்து பேசினால் கொலைசெய்யவும் தயாராகுங்கள் என்று கூறினார் நயினார் நாகேந்திரன். வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ. 10 லட்சம் தர தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆர்.கே.நகர் தோல்வியை மறைக்கவே, வைரமுத்து போன்றோரை திமுக தூண்டிவிடுகிறது என்று குற்றம் சாட்டிய நயினார் நாகேந்திரன், தவறாக பேசினால் தன் மீது போலீஸ் வழக்குப் போடுவார்கள் என்றும், வைரமுத்து மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..