மன்னாரிலிருந்து யாழ் சென்ற அரச பேரூந்து சாரதி யாழ் கச்சேரியடியில் செய்தது என்ன? (Photos) Share

இன்றையதினம் மதியம் 1 மணியளவில் மன்னாரிலிருந்து A 32 வீதிவழியாக யாழ்ப்பணம் செல்லும் அரசபேரூந்து யாழ். கச்சேரியடியிலுள்ள தரிப்பிடத்தில் நின்றது. " இறங்கிற பாதையில நிக்கிறவை கீழஇறங்கி வழிவிடுங்கோ,

பாவம் வயதுபோன ஐயா மத்தியானம் 12.30 க்கே பஸ்ஸில ஏறி தம்பி கச்சேரியடியில என்னை இறக்கிவிடு எண்டவர் " எனக்கூறியபடி " ஐயா அவசரப்படாமல் ஆறுதலா இறங்குங்கோ " என்று கூறினார். அந்த முதியவர் 80 வயதுக்கு மேலிருக்கும் இறங்கியபின் " நன்றி தம்பி " என மனசாரக் கூறியபோது " ஐயா பஸ்ஸவிட்டு விலத்தி நில்லுங்கோ " என்று கூறி அந்த முதியவர் வீதியின் ஓரத்துக்குப் போனபின்பே சாரதி பேரூந்தைச் செலுத்தினார். பொதுவாகப் பேரூந்துச் சாரதிகள், நடத்துநர்கள் பற்றிக் குறையாகக் குறிப்பிடும் இக்காலத்தில் இந்தச் சகோதரன் போல நல்லுள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். நீடூழி வாழ்க சகோதரா....!!!!

Image may contain: 1 person, sittingImage may contain: one or more people and outdoor

 

Thanks facebook post

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..