பெண்களுடன் உறவு கொண்டு விட்டு அவர்களைக் கொன்று பன்றிகளுக்குப் போட்ட முதியவர்!! நடந்தது என்ன? Share

கனடாவை சேர்ந்தவர் ராபர்ட் பிக்டோன் ,68 இவருக்கு வான்கூவரில் பன்றி பண்ணை உள்ளது. அங்கு மிக அமைதியான வாழ்க்கை வாழ்ந்த அவரின் மறுபக்கம் மிக பயங்கரமாக உள்ளது.


பாலியல் தொழிலாளர்கள், போதை மருந்து விற்பவர்கள் மூலம் பெண்களை தனது பண்ணைக்கு ராபர்ட் அழைத்து வருவார்.அவர்களுக்கு பணம், மது போன்றவற்றை கொடுப்பதாக ஆசைகாட்டி பெண்களை கொடுமைப்படுத்தி ராபர்ட் கொலை செய்வார்.

இப்படி 49 பெண்களை அவர் கொலை செய்துள்ளார், பின்னர் அவர்களின் சடலத்தை பண்ணையில் இருக்கும் பன்றிகளுக்கு உணவாகவும், அந்த மனித மாமிசத்தை போலீசாருக்கும் விற்றும் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2002-ல் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருப்பதாக ராபர்ட் மீது புகார் கூறப்பட்ட நிலையில் அங்கு அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அங்கு கொலை செய்யப்பட்ட பெண்களின் பொருட்களும், உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. தோடு இரண்டு பெண்களை கொலை செய்து அவர்களின் தலை, கை, கால்களை குளிரூட்டும் பெட்டியில் ராபர்ட் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ராபர்ட் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சிறையில் உள்ள சக கைதிகளிடம் இன்னும் ஒருவரை கொலை செய்திருந்தால் 50 பேரை கொன்ற பெருமை கிடைத்திருக்கும், என கூறியுள்ளார்.

ஆனால் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கூறுகையில், 49 என்பது ராபர்டின் கணக்கில் பாதி என அதிர்ச்சி தகவலை கூறினார்கள்.

2001-ல் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்த எலைன் ஆலன் என்னிடம் இருந்த 62 பெண்களை காணவில்லை என அப்போது புகார் அளித்திருந்தார். அதில் தற்போது வரை 34 பேரை இன்னும் போலீசாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதையெல்லாம் வைத்தே ராபர்ட்டின் கொலை எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என வழக்கறிஞர்கள் கூறினர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..