திருமணத்துக்கு பெண் தேவை என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்: அடித்த அதிர்ஷ்டம்..!! Share

நைஜீரியாவில் திருமணத்துக்கு பெண் தேவை என இளைஞர் பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில் அதன் மூலம் பெண்ணொருவருடன் ஆறே நாளில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.

 

சிடிமா அமீடு என்ற இளைஞர் கடந்த 30-ஆம் திகதி தன்னை திருமணம் செய்து கொள்ள பெண் யாராவது தயாராக இருந்தால் தன்னை அணுகலாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு இரண்டு நாட்களிலேயே சிலர் பதிலளித்த நிலையில் சோபி இஜியோமா என்ற பெண்ணும் சிடிமாவை மணக்க விருப்பம் தெரிவித்தார்.அவர் புகைப்படத்தை பார்த்தவுடன் சிடிமாவுக்கு பிடித்து போக இரண்டு நாட்கள் அதன் மூலமே இருவரும் தங்கள் காதலை வளர்த்தனர்.

பின்னர் தனது வீட்டிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சோபி வீட்டுக்கு சென்ற சிடிமா அவரிடம் தன் காதலை நேரில் வெளிப்படுத்தி காதலியின் குடும்பத்தாரிடம் தங்கள் திருமணம் குறித்து பேசினார்.

இதையடுத்து தனது மாமா வீட்டுக்கு சோபியை அழைத்து சென்ற சிடிமா அவரிடமும் தனது திருமணத்துக்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து ஜனவரி 6-ஆம் திகதி சிடிமா – சோபி திருமணம் நடைபெற்றது. சோபி கூறுகையில், முதல்முறை சிடிமாவை பார்க்கும் போதே அவரை எனக்கு பிடித்துவிட்டது.

நான் பார்த்ததிலேயே அழகான ஆண் சிடிமா தான் என கூறியுள்ளார்.தங்களுக்கு திருமணமான புகைப்படங்களை புதுமண தம்பதி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..