அக்காவை கொடூரமாக சித்தரவதை செய்யும் தங்கையின் காட்சிகள்!! (Video) Share

சொத்து தகராறின் காரணமாக, உடன் பிறந்த சகோதிரி என்றும் பாராமல், தங்கை அவரது அக்காவை கொடூரமாக தாக்கும் காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இன்றைய நவீன உலகத்தில், நாகரிகமும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டே போகும் வேலையில், மக்களிடம் சுயநலமும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அதில் சில மனிதர்கள் பணத்திறகாகவும், சொத்துக்காகவும் சில மனித மிருகங்கள், கொலை போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் பெண் ஒருவர் தனது சொத்துக்களை மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மூத்த மகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார்.

இதனால் அவரது இரண்டாவது மகள் ஆத்திரமடைந்து உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல், அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து தாக்குதல் காட்சியை வீடியோ எடுத்த பக்கத்து வீட்டார், அதனை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இருந்த போதிலும் போலீஸார் தரப்பில் இருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பக்கத்து வீட்டார் அந்த வீடியோவை தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சி பார்ப்பவரது நெஞ்சங்களை பதற வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com